செய்திகள்

தி.மு.க.வுக்கு அவப்பெயரை உருவாக்கினால் கடும் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Published On 2018-08-03 10:11 IST   |   Update On 2018-08-03 10:11:00 IST
தி.மு.க.வுக்கு அவப்பெயரை உருவாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். #MKStalin #DMK

சென்னை:

சென்னை விருகம்பாக்கத்தில் திமு.க.வினர் சிலர் பிரியாணி கடைக்குள் புகுந்து பிரியாணி கேட்டு நடத்திய தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்ததோடு கடைக்கும் நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுபற்றி மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடைக்குச் சென்று ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இது போன்ற கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு கழகத்தில் எக்காரணம் கொண்டும் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தினேன்.

தி.மு.க.விற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News