செய்திகள்

தமிழக அரசை கலைக்காதது ஏன்?- அமித்ஷாவுக்கு இளங்கோவன் கேள்வி

Published On 2018-07-10 14:01 IST   |   Update On 2018-07-10 14:01:00 IST
ஊழல் நிறைந்த மாநிலம் என்றால் தமிழக அரசை கலைக்காதது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார். #Congress #EVKSElangovan
சென்னை:

சென்னையில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகம் மாறி விட்டது என்று விமர்சித்தார்.

இதுபற்றி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாக கூறி இருக்கிறார். அப்படியானால் மத்திய அரசு உடனடியாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை.


ஊழல் பற்றி பேசும் அமித்ஷா கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் அவரது மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார் என்று விளக்க மளிக்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டம் போல் பேசி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும்போது விரைவில் இவர்கள் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan
Tags:    

Similar News