செய்திகள்

கருணாநிதி அவதாரம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2018-06-23 15:50 IST   |   Update On 2018-06-23 15:50:00 IST
கருணாநிதி அவதாரம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #karunanidhi #admk

மதுரை:

காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகத்தில் மறைந்த முதல் அமைச்சர் அம்மா அனைவருக்கும் விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். அவரது வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார்கள்.

காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதை தடுக்கவே ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். தற்போது மதுரையில் தென்மண்டல மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. இது இந்த அரசு செய்த சாதணை இல்லையா? ஆனால் எப்படியாவது இந்த அரசை வீழ்த்த வேண்டும் என்று சிலர் நினைத்து மக்களை துண்டி விடுகிறார்கள். அது எடுபடாது. அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைத்தவர்கள் வாய்மூடி மவுனியாகி விட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு தலைவராக கூட முடிய வில்லை. தி.மு.க. ஆட்சியில் மதுரை பக்கம் தலைகாட்டாத நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் குமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் செய்தார்.

அவரது நாடகத்தை மக்கள் ஏற்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது. கருணாநிதி அவதாரம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.


எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எனவே மக்கள் அனைவரும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவைராஜா, பிரிட்டோ, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், வட்ட செயலாளர் கே.வி.கே.கண்ணன், வக்கீல்கள் முருகன், ராஜசேகரன், லாரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் ரமணி, ஏ.பி.பாலசுப்பிரமணி, புதூர் அபுதாகீர், சோலைராஜா, கறிக்கடை முத்துகிருஷ்ணன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #karunanidhi #admk

Tags:    

Similar News