செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதம் செய்யாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் - ரங்கராஜன் எம்.பி.

Published On 2018-06-17 05:43 GMT   |   Update On 2018-06-17 05:43 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதம் செய்யாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ரங்கராஜன் எம்.பி. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

ராஜபாளையம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள தொழில் பாதுகாப்பு மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் ரெயில் நிலையத்தில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஏற்படக் கூடிய தொழில் நெருக்கடி காரணமாக, ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சாலைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடு விழாக்களை கண்டு கொண்டு இருக்கிறது.

அரசின் கொள்கை காரணமாக தொழில் முனைவோர், உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசு இது குறித்து பொருட்படுத்தாமல் இருப்பது இன்னொரு துயரமான பகுதி.

இதற்கான மாற்று வழி கண்டுபிடிக்க ராஜபாளையத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத்திலும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க உள்ளோம்.

முரண்பட்ட கருத்துக்களை நீதிபதிகள் கொடுப்பது புதிதல்ல. அரசியல் நெருக்கடியை உருவாக்கி கொண்டே இருக்கும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு வழங்க முடியும் என்றால் நீதிமன்றம் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் ஜனநாயக செயல்பாட்டை மேலும் முடக்கும் என்பது எனது கருத்து.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

Tags:    

Similar News