செய்திகள்

கவர்னர் 15 நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறை- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-05-17 15:57 IST   |   Update On 2018-05-17 15:57:00 IST
எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan

தஞ்சாவூர்:

தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றது மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது கர்நாடக விவசாயிகளுக்கு அடிதட்டாகவும், மக்களுக்கு பக்க பலமாகவும் அமைந்துள்ளது. இனி கர்நாடக மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அவர் ஏற்படுத்தி கொடுப்பார்.

இந்த வெற்றியை பெற்று தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பா.ஜனதா தனி ஒரு கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார். வேறு யாருக்கு அழைப்பு கொடுக்க முடியும்? எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான்.


கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ரூ.56 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது அவரது முதல் பெரிய முயற்சியாகும். பா.ஜனதா ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகவில் பா.ஜனதா ஆட்சி மூலம் காவிரி தண்ணீர் உறுதியாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கர்நாடக தேர்தலுக்கு முன்பே அங்கு பா.ஜனதா ஆட்சி அமையும் என்று நான் கூறியிருந்தேன். முதல்வர் எடியூரப்பாவிடம் காவிரி பிரச்சினை, இரு மாநில உறவு பிரச்சினை, தமிழ் சொந்தங்களுக்கு உள்ள பிரச்சினை குறித்து பேசுவேன். இன்னும் ஒரு மாதத்தில் அவரை சந்திப்பேன்.

காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது. இதை போட்டது தி.மு.கவும் காங்கிரசும் தான். அதை கிழியாமல் கவனமாக எடுக்க வேண்டும். இந்த முறை காவிரி தண்ணீர் கண்டிபாக வரும்.

தமிழகத்தில் எது தேவை,எது வேலை வாய்ப்பை கொடுக்கும் என்பதை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மற்றவர்களின் சதி திட்டம் காரணமாக மக்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

ஒரு சுப நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அங்கு நடிகர் எஸ்.வி.சேகர் வந்தது எனக்கு தெரியாது. அவரை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சை சுற்றுலா பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை வைத்திலிங்கம் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.  #ponradhakrishnan #yeddyurappa #karnatakagovernor

Tags:    

Similar News