செய்திகள்

ரஜினி களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

Published On 2018-01-03 12:45 IST   |   Update On 2018-01-03 12:45:00 IST
ரஜினி டுவிட்டரில் கருத்து கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும் எனவும் பிரமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையான ஆட்சி இல்லை. ஒக்கி புயல் பற்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கை தவலும் கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதன் காரணமாக மத்திய- மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் தமிழகம் வேண்டாம் கேரளாவுக்கு சென்று விடுகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர். ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

கவர்னர், தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதில் தவறு இல்லை. நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்யட்டும். இதுவரை தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. யாராவது நல்லது செய்யட்டும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவர்களை தேர்ந்து எடுப்பது மக்கள் சக்தி. ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு டுவிட்டரில் கருத்து கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. களத்தில் பேச வேண்டும், வாயில் அல்ல.



ரஜினியும் அரசியலுக்கு வரட்டும். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News