செய்திகள்

பணம் தருவதாக கடன் சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

Published On 2017-12-22 12:55 IST   |   Update On 2017-12-22 12:55:00 IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தினகரன் கூறினார்.

ஆலந்தூர்:

டி.டி.வி.தினகரன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களி டம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு எங்களுக்கு முக்கியம் இல்லை. மக்களின் கருத்துதான் முக்கியம். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்கள் எனக்கு வெற்றியை தருவார்கள்.

தமிழ்நாட்டில் நடை பெறும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஆர்.கே.நகர் தேர்தல் தொடக்கமாக அமையும்.

எம்.ஜி.ஆர். தேர்தலில் நின்றபோது தி.மு.க. அடக்கு முறையை கையாண்டது. அதே அடக்கு முறையை எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது எனக்கு எதிராக மேற்கொள்கிறது. தேர்தலில் அவர்கள் மண்ணை கவ்வுவார்கள்.

தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பணம் தருவதாக கடன் சொல்லி யாராவது ஓட்டு கேட்பார்களா? நான் அப்படி ஓட்டு கேட்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News