செய்திகள்
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை முழுமையாக தடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை முழுமையாக தடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தலை தள்ளிவைப்பது என்ற பேச்சு சரியானது அல்ல. அங்கு பணப்பட்டுவாடாவை முழுவதும் தடுக்க வேண்டும். மத்திய அரசும், தேர்தல் ஆனையமும் முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நியாயமாக நடத்த வேண்டும். மந்திரிகளில் இருந்து மருத்துவர் வரை மாற்றி, மாற்றி பேசுகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும்.
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பலபேர் மாயமாகி உள்ளனர். சிலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் மோடி வரவேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் தேர்தல்தான் முக்கியம் என்று இருந்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் மீனவர்களை சந்தித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.