செய்திகள்
நந்தினியின் குடும்பத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறிய போது எடுத்த படம்

கவர்னர் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-02-11 09:45 IST   |   Update On 2017-02-11 09:45:00 IST
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை 7½ கோடி மக்கள் சார்ந்த பிரச்சினை ஆகும். இதில் கவர்னர் எடுக்கும் முடிவு நடுநிலையான நல்ல முடிவாக இருக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் குடும்பத்தினரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அச்சிறுமியின் வீட்டில் தரையில் அமர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் உணவு சாப்பிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுமி நந்தினி கொலையில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிடவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த சிறுமி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை ஒரு கட்சி சார்ந்தது அல்ல. இது தமிழகத்தின் 7½ கோடி மக்கள் சார்ந்த பிரச்சினை ஆகும். இதில் உரிய முடிவெடுக்க கவர்னருக்கு போதிய அவகாசம் தேவைப்படுகின்றது. கவர்னர் நேர்மையானவர். அவர் எடுக்கும் முடிவு நடுநிலையான நல்ல முடிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News