லைஃப்ஸ்டைல்
உயில்

உயில் பற்றி பதிவுத்துறை அளிக்கும் தகவல்கள்

Published On 2019-08-03 03:00 GMT   |   Update On 2019-08-03 03:00 GMT
ஒருவரது சுய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் சேர்த்த ‘சுயார்ஜித’ சொத்துக்களை, அவரது விருப்பப்படி வேண்டியவர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்கலாம்.
ஒருவரது சுய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் சேர்த்த ‘சுயார்ஜித’ சொத்துக்களை, அவரது விருப்பப்படி வேண்டியவர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்கலாம். அதற்காக ‘விருப்ப உறுதி ஆவணம்’ என்ற உயிலை (WILL) எழுதி, ஆவணமாக பதிவு செய்வது பற்றி பதிவுத்துறை குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

* தனது விருப்பப்படி ஒருவர் உயில் எழுதுவது அவரது அடிப்படை உரிமையாகவும், கடைசி ஆசையாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

* உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.

* உயில் ஆவணத்தை பொறுத்த வரையில், அதன் பதிவுக்கான தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.

* உயில்களை சீலிடப்பட்ட உறைகளுக்குள் வைத்து மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக ‘டெபாசிட்’ செய்து கொள்ள இயலும்.

* அவ்வாறு பாதுகாக்கப்படும் சீலிடப்பட்ட உறைக்குள் உள்ள உயிலை அதை எழுதியவர் அவரது ஆயுட்காலத்திற்குள் திரும்பவும் பெற இயலும்.

* உயில் எழுதி சீலிட்ட உறையில் வைப்பு செய்தவர், இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நபர் விண்ணப்பம் செய்யும்போது, மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்.

* பதிவு செய்யப்பட்ட உயிலுக்கான சான்றிடப்பட்ட நகலை, அதனை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே பெற முடியும்.

* உயிலை எழுதிக் கொடுத்தவர் இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து எவரும் சான்றிடப்பட்ட நகலைப் பெறலாம்.

* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அசையாத சொத்துக்களை பொறுத்து, விருப்ப உறுதி ஆவணம் என்ற உயில் எழுதப்பட்டிருக்கும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் மூலம் அது உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னரே சட்டப்படி (Pr-o-b-ate) அதை செயல்படுத்த இயலும்.
Tags:    

Similar News