லைஃப்ஸ்டைல்

பெண்களின் மன அழுத்தத்தை போக்கும் வைட்டமின் உணவுகள்

Published On 2018-08-27 03:48 GMT   |   Update On 2018-08-27 03:48 GMT
நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக கார்டிசால் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகமாகி பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.

அதிலிருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. வைட்டமின் சி, கார்டிசால் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆதலால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம்.

* புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி பழ வகைகள் வைட்டமின் சி அதிகம் நிரம்பப்பெற்றவை. அவற்றுக்கு மன நிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் கார்டிசால் ஹார்மோனுக்கு எதிராக போராடி இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். அவற்றை சாலட்டுகளிலோ, இனிப்பு பலகாரங்களிலோ சேர்த்து சாப்பிடலாம்.



* தக்காளி பழங்களில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் அதிகம் இருக்கின்றன. அவை மன அழுத்தம் மட்டுமின்றி புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும் தன்மை கொண்டவை. அவற்றை சாண்ட்விச்களிலோ, சாலட்டுகளிலோ, புதினாவுடன் சேர்த்து தக்காளி ஜூஸாகவோ பருகலாம்.

* தக்காளி, பெர்ரி பழங்களை விட சிவப்பு முள்ளங்கியில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளடங்கி இருக்கிறது. அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

* முலாம் பழமும் அதிக அளவில் வைட்டமின் சி சத்து கொண்டது. ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 90 சதவீதத்தை இதன் மூலமே பெற்றுவிடமுடியும். 
Tags:    

Similar News