பெண்கள் உலகம்

வீட்டை காப்பீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை

Published On 2023-04-28 12:38 IST   |   Update On 2023-04-28 12:38:00 IST
  • எதிர்பாராத விபத்தால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும்.
  • காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

நமது வாழ்நாளில் நாம் செய்யும் மிகப்பெரிய செலவு ஒரு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது ஆகும். அவ்வாறு பல்வேறு கனவுகளுடன் கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும் வீட்டை காப்பீடு செய்வது முக்கியமானது. நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம் ஆகிய இயற்கை பேரழிவுகள், எதிர்பாராத விபத்துகள் போன்ற காரணங்களால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும். அந்தத் தொகை வீட்டை சீர்படுத்துவதற்கும், இழப்பை ஈடு செய்வதற்கும் உதவும். காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

* நாம் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டைப் பற்றிய முழு விவரங்களையும், விதிமுறைகளையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், தேவைப்படும் நேரத்தில் காப்பீட்டின் முழுப் பயனையும் பெற முடியும்.

* உங்கள் தேவையைப் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த காப்பீட்டை வாங்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.

* தேர்ந்தெடுக்கும் காப்பீடு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் டி.வி., கணினி போன்ற மின்னணு சாதனங்களுக்கு எதிராக, விரிவான பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

* காப்பீட்டாளர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால், காப்பீட்டின் பயனை பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, காப்பீட்டாளரின் நிதிப் பின்னணியை உறுதி செய்வது அவசியம்.

* காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீடு வழங்கும் விகிதம், நிறுவனம் ஒரு ஆண்டில் எத்தனை இழப்பீடுகளை தந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

Tags:    

Similar News