அழகுக் குறிப்புகள்

கூந்தலுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகள் வரலாம்...

Published On 2023-07-09 04:24 GMT   |   Update On 2023-07-09 04:24 GMT
  • முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.
  • முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.

ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.

ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.

அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.

Tags:    

Similar News