அழகுக் குறிப்புகள்

பருக்கள் வராமல் தடுப்பதற்கான சில வழிகள்

Published On 2024-04-02 09:30 GMT   |   Update On 2024-04-02 09:30 GMT
  • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
  • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

 முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

 கரும்புள்ளிகள் மறைய:

வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

 முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

இயற்கை அழகு சிகிச்கை:

ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

Tags:    

Similar News