அழகுக் குறிப்புகள்

ஆரோக்கியமான தலை முடிக்கு அற்புதமான எண்ணெய்

Published On 2022-09-13 06:52 GMT   |   Update On 2022-09-13 06:52 GMT
  • கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
  • கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.

கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.

Tags:    

Similar News