லைஃப்ஸ்டைல்
வறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா?

வறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா?

Published On 2019-08-15 05:46 GMT   |   Update On 2019-08-15 05:46 GMT
பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
பனிக்காலம் வந்தாலே குளிர்காற்றால் சருமத்தில் உள்ள ஈரம் போய் வறண்டு சருமம் பொலிவிழந்து வெடித்து விகாராமாக காணப்படும். பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். பனி வெடிப்பு தீர பண்டைய காலம் தொட்டே கிளிசரின் பயன்படுத்தி உள்ளார்கள்.

கிளிசரின் இன்று நேற்றல்ல பண்டைய காலத்தில் இருந்து பெண்களின் அழகு மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளிசரினை கிளைக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. கிளிசரின் தாவர மற்றும் விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வாசனையில்லாத, இனிப்பு சுவை கொண்ட, பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் தான் கிளிசரின். ஷாம்பு, க்ரீம்கள், லிப் பாம் போன்ற அனைத்து விதமான அழகுசாதனப் பொருட்களில் கிளிசரின் உள்ளது. கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ரோஸ் வாட்டர் எனும் பன்னீர் உடன் கிளிசரினை கலந்து முகம், கை, கால்களில் தடவி வரவும். பனி வெடிப்பு மாறி சருமம் பளபளப்பாக மற்றும் மென்மையாக மாறும்.

கிளிசரின் சருமத்தின் ph பயன்படுத்துகிறது மேலும் குளிர் காற்று, UV கதிர்களால் சருமத்தில் உள்ள ஈரம் ஆவியாகாமல் பாதுகாக்கிறது. ஆகவே தினசரி கிளிசரின் சருமத்தின் மீது பூசுவது நல்லது தான்.

சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தோல் வியாதிகள் நீங்க கிளிசரினை தடவி வந்தால் தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகிறது.

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் கிளிசரின் தடவுவதால் நீங்கும்.
Tags:    

Similar News