லைஃப்ஸ்டைல்
அணிந்தால் அழகு, பார்த்தால் பரவசம் போல்கி வைர நகைகள்

அணிந்தால் அழகு, பார்த்தால் பரவசம் போல்கி வைர நகைகள்

Published On 2019-08-07 05:59 GMT   |   Update On 2019-08-07 05:59 GMT
வைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வைரத்தைப் பற்றி ஓரளவு தெரியும். ஆனால், அது என்ன போல்கி வைரங்கள் என்ற வினா நம் மனதில் எழுகிறதல்லவா.

இயற்கையான அன்ஃபினஷ்டு வைரங்களைக் கொண்டு செய்யப்படுபவையே போல்கி வைர நகைகளாகும். பூமியிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் அன்கட் வைரங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இவ்வகை வைர நகைகளுக்கு உலகம் முழுவதிலுமே அதிக தேவை உள்ளது எனலாம்.

போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் சோக்கர் மட்டுமே மூன்று முதல் பதினைந்து லட்சங்கள் வரை இருக்கும். சோக்கர் செட் என்பது அதன் டிசைன், அதில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் மற்றும் வேலைப்பாட்டைப் பொறுத்து பல கோடிகள் வரை விலையைத் தொடும்.

போல்கி வைரங்களின் வடிவத்திற்கு ஏற்ற அழகழகான டிசைன்களில் மோதிரங்கள் செய்யப்படுகின்றன. ரூபி, எமரால்டு மற்றும் நீல நிறக்கற்களுடன் போல்கி வைரங்கள் பதித்து செய்யப்பட்டிருக்கும் மோதிரங்களை அணிவதற்கு அனைவருமே ஆசைப்படத்தான் செய்வார்கள்.

போல்கி டயமண்ட் சோக்கர்களை ஒரு விழாவிற்கு அணிந்து சென்றால் அங்கு கூடியிருக்கும் அனைவரின் கண்களும் நம் சோக்கரின் மேல்தான் இருக்கும். போல்கி வைர சோக்கர்களில் குந்தன் பீகாக் வேலைப்பாடு என்பதை நம்மால் வர்ணிக்கவே முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடன் இருக்கும்.

அதேபோல், மரகதம் மற்றும் பச்சை ஜேட் கற்களுடன் போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் சோக்கர் செட்டானது அற்புதம் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானது எனலாம்.

போல்கி நெக்லஸ்கள் மிகவும் பாரம்பரியத்துடனும் அதே நேரம் நவநாகரீகப் பாணியிலும் வடிவமைக்கப்படுகின்றன. முகலாயர் ஆண்ட காலம் முதல் இன்று வரை தனக்கென்று ஒரு இடத்தைப் போல்கி வைர நகைகள் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் வளையல்களும், பிரேஸ்லெட்டுகளும் ரிச்சான தோற்றத்தைத் தருபவை என்று உறுதியாகச் சொல்லலாம்.

பெரிய கடா வளையல்கள், விக்டோரியன் ஸ்டைல் ஆன்டிக் தோற்றத்தைத் தரும் பிரேஸ்லெட்டுகள், கஃப் மாடல், ரூபி, ஸஃபயர் மற்றும் போல்கி வைரங்களைக் கொண்டு செய்யப்படும் பெரிய அளவிலான பிரேஸ்லெட்டுகள், எனாமல் மற்றும் வைரங்கள் பதித்த பிரேஸ்லெட் வளையல்கள் என்று அருமையான பல பாணிகளில் வடிவமைக்கப்பட்டு செலிப்ரட்டிகளின் தங்கநகை சேகரிப்பில் கட்டாயம் இடம் பிடிப்பவையாக இருக்கின்றன.

காதணிகளிலும் தனக்கென்று முத்திரையைப் பதிக்கின்றன போல்கி வைரங்கள். ரிவர்சிபள் ரோஸ் ஹூப்களுடன் வரும் காதணிகள், நீண்ட கிறிஸ்டல் மற்றும் போல்கி வைரங்களுடன் வடிவமைக்கப்பட்ட சாண்டிலியர் மணப்பெண் காதணிகள், சந்திர பாலி மாடல் காதணிகள், திராட்சைக் கொத்து போல் போல்கி வைரங்களாப் பதித்து வடிவமைக்கப்பட்ட காதணிகள், எமரால்டு ஸ்டிரிங் மற்றும் போல்கி வைரங்களுடன் வடிவமைக்கப்பட்ட காதணிகள் என்று காதணிகளின் வகைகளைப் பட்டியல் போட்டு சொல்லலாம்.

வைரக்கற்களின் வடிவம், நிறம் மற்றும் அளவைப் பொறுத்தே அவற்றின் விலையானது நிர்ணயிக்கப்படுகின்றது.

இதுபோன்ற விலை அதிகமான வைரங்களை வாங்கும் போது மிகவும் நம்பகமான நகைக் கடைகளில், வைரத்தின் தரச்சான்றுடன் வாங்குவதே உத்தமம். வைர நகைகளில் இருக்கும் வைரக்கற்களை அடிக்கடி தொட்டுப் பார்க்கக் கூடாது. தொட்டுப் பார்த்தால் வைரத்தின் ஜொலிஜொலிப்பானது குறைய வாய்ப்புள்ளது. வைர நகைகளை அணிந்து கொண்டு நீச்சலடிப்பது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வைர நகைகளை வைப்பதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பேடட் பெட்டிகளில் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற நகைகளுடன் வைர நகைகளைச் சேர்த்து வைத்தால் வைரக் கற்களில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News