லைஃப்ஸ்டைல்
டீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...

டீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...

Published On 2019-07-20 03:36 GMT   |   Update On 2019-07-20 03:36 GMT
இன்றைய டீன் ஏஜ் ஆண்கள் வித விதமான ஆடைகள் அணிவதுடன் அதற்கேற்றாற்போல் தலையலங்காரம் மற்றும் ஷுக்கள், கைக்கடிகாரம், காதில் கடுக்கண் என்று மிகவும் நவநாகரீகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
இன்றைய டீன் ஏஜ் ஆண்கள் வித விதமான ஆடைகள் அணிவதுடன் அதற்கேற்றாற்போல் தலையலங்காரம் மற்றும் ஷுக்கள், கைக்கடிகாரம், காதில் கடுக்கண் என்று மிகவும் நவநாகரீகமாக இருப்பதையே விரும்புகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு ஆடைகளில் என்ன டிசைன் இருக்கப் போகிறது என்ற காலம் மாறி கேஷுவல் ஷர்ட்ஸ், ஃபார்மல் ஷர்ட்ஸ் என்று எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ வகை வந்து விட்டது.

கேஷுவல் ஷர்ட்களில் ஃப்ளோரல் டிசைன்களை பெரிதும் ஆண்கள் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். ஜயாமெட்ரிகல் டிசைன்கள் ஷர்ட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் வருவதுபோல் இருப்பது, ப்ரிண்டட், ஷர்ட்டுகள், காட்டன் லினென் ஷர்ட்டுகள் ஓவர்லேப் ஷர்ட்டுகல், எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் கூடியஸ்ட்ரைப்டு ஷர்ட்டுகள், ஸ்டென்சில் பிரிண்ட்டட் ஷர்ட்டுகள் என்று எத்தனையோ டிசைன்கள், வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஷர்ட்டுகளில் ரெகுலர் மற்றும் ஸ்லிம் ஃபிட் என இரண்டு வகை உள்ளது. சிலர் உடலோடு கச்சிதமாகப் பொருந்தும் ஸ்லிம் ஃபிட் ஷர்ட்டுகளையே எப்பொழுதும் அணிவார்கள். மற்றும் சிலர் கொஞ்சம் லூசாக இருக்கும் ரெகுலர் பிட் ஷர்ட்டுகளை அணிவதையே விரும்புவார்கள். ஸ்லிம் ஃபிட் ஷர்ட்டுகள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஒல்லியான உடல் வாகு உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஃபார்மல் ஷர்ட்டுகளில் பிரிண்டட், ஸ்ட்ரைட்ஸ், செக்ட், லூப் மற்றும் ப்ளெயின் காலர் ஷர்ட்டுகள், க்ளாஸிக் மற்றும் ஸ்டாண்டு காலர் ஷர்ட்டுகள், சைனீஸ் காலர் ஷர்ட்டுகள், ஹேண்டுலூம் காட்டன் ஷர்ட்டுகள் என எத்தனையோ வகைகள் உள்ளன.

மேலும், டிஜிட்டல் ப்ரிண்ட் பேண்ட் மற்றும் சட்டைக்கு மேல் ஜாக்கெட்டுகளை அணிந்து கொள்வதை இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

ஜாக்கெட்டும் பேண்ட்டும் ஒரே விதமான நிறம் மற்றும் துணியால் தைக்கப்பட்டு உள்ளே அணியும் ஸர்ட்டானது கான்ட்ராஸ் நிறத்தில் அணிவதையும் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

ஷர்ட், பேண்ட் மற்றும் ஜாக்கெட் என மூன்றுமே வெவ்வேறு நிறத்தில் அணிந்து கொள்வதும் இப்பொழுது பேஷனாகவே உள்ளது.



சில்க் மற்றும் சந்தேரி காட்டனில் அறிமுகமாகியிருக்கும் குர்த்தாக்களில் உடலின் முன்புறம் முட்டி வரை உயரமும், உடலின் பின்புறம் மிக நீண்டும் இருக்கும். குர்த்தாக்கள் சந்தையில் புது வரவு என்றே சொல்லலாம். ப்ரிண்டட், எம்ப்ராய்டரி மற்றும் ப்ளெயின் குர்த்தாக்களை வடஇந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம்.

பேண்ட்டுகளில் காட்டன் ட்ரவுச்சர்கள், கொசுவம் வைத்தாற்போல் இருக்கும் ட்ரேப்டு பேண்ட்டுகள், சுடிதார் மற்றும் டோத்தி பேண்டுகள் இவை அனைத்துமே குர்த்தாக்களுடன் அணிவதற்கு ஏற்றவை என்றே சொல்லலாம். இவை மட்டுமல்லாமல் மிகவும் லூசான பேண்ட் மற்றும் மிகவும் டைட்டான கணுக்கால் வரையிலான பேண்ட்டுகளையும் அணிவதற்கு இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ட்ராப் வெயிஸ்ட் பேண்டுகளை கலைத் துறையில் இருப்பவர்கள் அதிலும் மேற்கத்திய நடனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் விரும்பி அணிகிறார்கள் என்றே சொல்லலாம்.

ஜோத்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட பந்த்கலாஸ் ஆடைகள் இன்றைய தலைமுறை விரும்பும் நவநாகரீக ஆடை என்றே சொல்லலாம். இது மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ள ஏற்றவை.

ஜாக்கெட் வகைகளில் இப் பொழுது மோடி ஜாக்கெட் என்பதும் மிகப் பிரபலம்.

ஷர்ட்ஸ்களை அணிந்து கொள்வது என்பது இளைஞர்களிடம் மட்டுமல்லாது முதியவர்களிடமும் வேரூன்றி விட்டது என்றே சொல்லலாம். பிரிண்ட்ட் ஷர்ட்ஸ்களை அணிந்து ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்ஸ் அல்லது பிளையின் நிற டி -ஷர்ட்ஸ் அணிவது இப்பொழுது ட்ரெண்டாக உள்ளது.

முக்கால் பேண்டுகள் மற்றும் கார்கோ பேண்டுகளும் மறுபடியும் இளைஞர்களின் ட்ரெண்டி ஆடைகளின் வரிசையில் தங்களை முன்நிறுத்திக் கொள்ளத் தயாராகக் காத்துக் கிடக்கின்றன.
Tags:    

Similar News