பெண்கள் உலகம்
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் எண்ணெய்

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் எண்ணெய்

Published On 2019-07-03 11:40 IST   |   Update On 2019-07-03 11:40:00 IST
இளமையை பாதுகாத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் ஆமணக்கு எண்ணெயை எந்த வகையில் எந்த பொருளுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பலவித எண்ணெய்கள் இருந்தாலும் இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக உள்ளது. இந்த எண்ணெயில் இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது. இந்த எண்ணெயை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.

* 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

* 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும்.

* 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

* 1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

Similar News