லைஃப்ஸ்டைல்

ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்

Published On 2019-04-19 05:15 GMT   |   Update On 2019-04-19 05:15 GMT
பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படியொல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

2. ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் கூந்தலை அலசி வந்தால், கூந்தல் மென்மையாக இருக்கும்.

3. ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும்.

4. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.

5. ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

6. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.

7. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.

8. சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.

9. இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.

10. ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் நீங்கள் விரும்பும் மாய்சுரைசிங் க்ரீம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இது உடலுக்கு சிறந்த மாய்சுரைசிங் க்ரீமாக செயல்படும்.
Tags:    

Similar News