லைஃப்ஸ்டைல்

அருமையான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி

Published On 2018-11-28 08:40 GMT   |   Update On 2018-11-28 08:40 GMT
பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 3
தண்ணீர் - 11/2 கப்
பூண்டு (தோலுரித்து) - 4 பல்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பன்னீர் துண்டுகள் - 1 கப்
கஸ்தூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை :


குடைமிளகாயை 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் தக்காளியை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும்.

வேக வைத்த தக்காளியை ஆறவைத்து தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

அடுத்து கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.

கடைசியாக அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News