பெண்கள் உலகம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மூளை வளர்ச்சிக்கு தூண்டும் பேரீச்சம்பழ கொழுக்கட்டை

Published On 2018-09-12 21:59 IST   |   Update On 2018-09-12 21:59:00 IST
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நவீன மருத்துவ ஆய்வுகள் பேரிச்சம்  பழத்தை உணவில் சேர்ப்பது, உடல் வழியாக மூளையை ஊடுருவி நியூரோ டீஜெனெரேட்டிவ் எனப்படும் ஞாபக மறதி/மூளை சிதைவை உண்டாக்கும் இன்டெர்லுக்கின் (I L- 6)  போன்ற குறிப்பான்களை தடுத்து,  மூளை செல்களில் உண்டாகும் படலங்கள்  செல்களின் தொடர்பை வலுவிழக்க செய்து செல் சாவிற்கு  வழிவகுத்துவிடாமல் தடுக்கிறது. பேரீச்சம்பழத்தை பூரணமாக வைத்து கொழுக்கட்டைகளாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது சிறந்த ஆரோக்கியமான தின்பண்டமாகவும் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் இயற்கை உணவாகும்.

தேவையான பொருட்கள் :

கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
அரிந்த பேரிச்சம்பழம் - 50 கிராம் 
அரிந்த பிஸ்தா/பாதம்
முந்திரி 
நெய் -1/2 டீ  ஸ்பூன் 
தேங்காய் துருவல் 1/2 கப்  

செய்முறை :

பேரீச்சம்பழத்தை வாணலியில் போட்டு லேசாக  இளகியவுடன், மசித்து, அரிந்து வைத்துள்ள பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள் கலந்து இறக்கி நெய், தேங்காய் துருவல் சேர்த்து பூரணமாக்கி கொள்ளவும், அதை மேல் மாவுடன் சேர்த்து அச்சில் வைத்து பிடித்து 6-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
Tags:    

Similar News