சமையல்

சூப்பரான ரவா கார பொங்கல்

Published On 2023-04-18 06:44 GMT   |   Update On 2023-04-18 06:44 GMT
  • ரவையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
  • இன்று சூப்பரான ரவா கார பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ரவா - 1 கப்

வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்

பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - சிறிதளவு

நெய் - 3 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 10

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும்.

* அடுத்து இதில் நன்கு வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

* அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலக்கவும்.

* இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா கார பொங்கல் தயார்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News