சமையல்

கால்சியம் நிறைந்த வேர்க்கடலை எள் பர்ஃபி

Published On 2023-02-17 05:31 GMT   |   Update On 2023-02-17 05:31 GMT
  • எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
  • வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை - 1 கப் 

எள் - அரை கப் 

உலர்ந்த தேங்காய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பால் பவுடர் - 6 டேபிள் ஸ்பூன்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - முக்கால் கப்

தண்ணீர் - 1 கப்

செய்முறை

எள்ளை வெறும் கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்தெடுத்து கொள்ளவும். ஆறிய பின் இதனை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் எள்ளுடன் உலர்ந்த தேங்காய் பொடி சேர்க்கவும். இவை மூன்றையும் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும்.

நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும்போது, இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு பர்ஃபியை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

குறிப்பு: உலர்ந்த தேங்காய் பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News