சமையல்

கோவிலில் கொடுப்பது போலவே ருசியான வெண் பொங்கல் வீட்டிலேயே செய்யலாம் வாங்க...

Published On 2022-06-30 06:17 GMT   |   Update On 2022-06-30 06:17 GMT
  • கோவிலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும்.
  • கோவில் வெண் பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - ஒரு கப்

சிறு பருப்பு - கால் கப்

இஞ்சி - ஒரு துண்டு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 5

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

தண்ணீர் - 41/2 கப்,

கறிவேப்பிலை கொத்து.

செய்முறை

மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து லேசாக சூடு ஏறியதும் அரிசி, சிறு பருப்பை சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும். அரிசியை நேரடியாக அப்படியே நாம் பயன்படுத்துவதை விட, இப்படி நாம் வதக்கி சேர்க்கும் பொழுது தான் வெண் பொங்கல் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

அதன் பின்னர் ஒருமுறை அவற்றை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் நான்கரை(4 1/2) டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அலசிய அரிசி மற்றும் சிறு பருப்பை சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் விட்டு எடுக்க வேண்டும்.

தாளிப்பு கரண்டியில் நெய்யை ஊற்றி லேசாக சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கிய பின்னர் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த அரிசியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு நெய்விட்டு அடிப் பகுதியிலிருந்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க மிக மிக ருசியான கோவில் வெண் பொங்கல் ரெடி.

பொங்கலை பொறுத்தவரை தாளித்த பிறகு குக்கரை மூடி வைப்பதை விட அரிசி, பருப்பு வெந்து எடுத்த பிறகு தாளித்துக் கொட்டி சேர்ப்பது தான் ருசியைக் கொடுக்கும். அது போல் அரிசி பருப்பை வறுத்து சேர்த்தால் தான் கோவிலில் கொடுப்பது போல மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்களும் உங்களுடைய வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

Tags:    

Similar News