சமையல்

டீக்கடை ஸ்டைலில் கீரை வடை செய்யலாம் வாங்க....

Published On 2022-06-18 09:14 GMT   |   Update On 2022-06-18 09:14 GMT
  • தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கீரை - 1 கட்டு

உளுந்து - 200 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.

கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.

பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் கீரை வடை தயார்.

இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.

Tags:    

Similar News