லைஃப்ஸ்டைல்
ராகி முருங்கைக்கீரை தோசை

சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை

Published On 2019-08-14 04:22 GMT   |   Update On 2019-08-14 04:22 GMT
தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 1/4 கிலோ
முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
வெங்காயம் - 2
பச்சரிசி - கால் கப்
உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)

பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.

தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News