லைஃப்ஸ்டைல்
முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்

முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்

Published On 2019-08-13 04:26 GMT   |   Update On 2019-08-13 04:26 GMT
வழக்கமான முட்டைகோஸ் பொரியல் உடன் கேரட் மற்றும் பட்டாணி சேர்க்கும் பொழுது மேலும் சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயம் -1
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
கடலை பருப்பு - தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு தேவையான அளவு



செய்முறை

முட்டைகோஸ், கேரட்டை நன்றாக கழுவிய பின்னர் துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாக கிளறி விடவும்.

காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் தயார்

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News