லைஃப்ஸ்டைல்
பாலக்கீரை முட்டை புர்ஜி

பாலக்கீரை முட்டை புர்ஜி

Published On 2019-08-06 04:21 GMT   |   Update On 2019-08-06 04:21 GMT
பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 2 கப்
முட்டை - 3 ( வெள்ளைக்கரு மட்டும்)
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

கீரை வதங்கியவுடன் முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News