லைஃப்ஸ்டைல்
வெஜிடபிள் அரிசி ரொட்டி

சத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி

Published On 2019-07-08 04:56 GMT   |   Update On 2019-07-08 04:56 GMT
கர்நாடகாவில் அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். இன்று காய்கறிகள் சேர்த்து அரிசி ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2 கப்,
கேரட் - 1
கோஸ் - சிறிய துண்டு
தேங்காய் - 3 பத்தை,
வெள்ளரிக்காய் - பாதி,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாகத் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News