பெண்கள் உலகம்
பட்டாணி கேரட் அடை

சத்து நிறைந்த பட்டாணி கேரட் அடை

Published On 2019-07-05 10:03 IST   |   Update On 2019-07-05 10:03:00 IST
பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :

பட்டாணி - கால் கிலோ,
கேரட் - 100 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி - அரை கட்டு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

கொத்தமல்லி, கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பட்டாணியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைத்துக் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்த கொள்ளவும்.

அரைத்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை  அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

சூப்பரான சத்தான பட்டாணி கேரட் அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News