பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சம்பா கோதுமை சுண்டல் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
சம்பா கோதுமை - அரை கப்,
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, தேங்காய் துருவல் - சிறிதளவு,
செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சம்பா கோதுமையை நன்றாக கழுவி முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.