லைஃப்ஸ்டைல்

சத்தான கோதுமை ரவை புட்டு

Published On 2019-05-17 04:44 GMT   |   Update On 2019-05-17 04:44 GMT
பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ரவை புட்டு. இன்று இந்த புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

கோதுமை ரவை - 3 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு



செய்முறை :

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.

இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.

புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சூப்பரான கோதுமை ரவை புட்டு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News