லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு புட்டு

Published On 2018-12-07 04:19 GMT   |   Update On 2018-12-07 04:19 GMT
தினமும் பச்சைப்பயறை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பச்சைப் பயறு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சைப் பயறை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு, முதல் நாள் இரவே ஊறவிடவும்.

மறுநாள் நீரை நன்கு வடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஆவியில் வேகவிடவும்.

ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து… வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்து உதிர்த்த பயறு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

சூப்பரான பச்சைப் பயறு புட்டு ரெடி.
Tags:    

Similar News