பொது மருத்துவம்

தினமும் மூன்று பேரீச்சை சாப்பிட்டால்...

Published On 2023-07-19 02:30 GMT   |   Update On 2023-07-19 02:31 GMT
  • பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது
  • மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

தினமும் மூன்று பேரீச்சம் பழங்களாவது சாப்பிட வேண்டும். அதன் மூலம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கல்லீரலை பலப்படுத்துவதில் பேரீச்சம் பழத்திற்கும் பங்கு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நலனுக்கும் பேரீச்சம் பழம் இன்றியமையாதது. பக்கவாதம், மாரடைப்பு, கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும்.

பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் அதில் உள்ளடங்கி இருக்கும் லூடின், ஜியாசாந்தைன் போன்றவையும் பார்வை சக்தியை மேம்படுத்தும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை குறைத்து கண்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படும். மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம். அதில் கலந்திருக்கும் சர்க்கரை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்புகள், நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம். அவை மூளை சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகை செய்யும். விளையாட்டு வீரர்கள் தவறாமல் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அது உடல் ஆற்றலை அதிகப்படுத்தும். செரிமானம் சீராக நடைபெறவும் பேரீச்சம் பழம் உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் வலி, வீக்கத்தை குறைக்கவும் பேரீச்சம் பழம் துணைபுரிகிறது. நோய் தொற்றுகளில் இருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நொறுக்கு தீனி பிரியர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லது.

Tags:    

Similar News