பொது மருத்துவம்

ஹைட்ரோகுளோரிக் அமிலம்-ஒரு பார்வை

Published On 2023-09-25 06:21 GMT   |   Update On 2023-09-25 06:21 GMT
  • உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது.
  • உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.

நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது.

ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது. இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது.

மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும்.

காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

Tags:    

Similar News