பொது மருத்துவம்

மாதுளம் பூவின் மகிமை

Published On 2025-09-06 11:29 IST   |   Update On 2025-09-06 11:29:00 IST
  • மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
  • பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும்.

மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ரத்த விருத்திக்கு உதவும்.

இருமல் இருந்தால் மாதுளை மொக்கை வெய்யிலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று வேளையும் கொடுக்கலாம்.

சில நேரங்களில் மூக்கில் ரத்தம் கசிந்தால், மாதுளம் பூவைச் சாறு எடுத்து, அருகம்புல்லைச் சேர்த்து இடித்து அந்தச் சாறைப் பருகலாம்.

தொண்டைக்கம்மல், தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு மாதுளம் பூவை எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, அதில் சிறிது தேனும், எலுமிச்சம் பழச்சாறும் விட்டு கலக்கி, கொப்பளிக்கலாம்.

அருகம்புல் வேர் எடுத்து, மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் தயாரித்து, பசு வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து குடித்தால், உடலில் கலந்த விஷம் முறியும். மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.

பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும். அதிவிடயம், பீநாரிப்பட்டை, மாதுளம் பழத்தோல், வில்வப் பழச் சதை, குடசப்பாலை, முத்தக்காசு, ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி அருந்தினால், பேதி நிற்கும்.

மாதுளம் பூ, காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சமமாகக் கலந்து, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து கண்களில் விட்டால், கண் தொடர்பான பாதிப்புகளுக்கு நல்லது.

மாதுளம் பூவை பசு நெய்யுடன் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும். அதை இறக்கி ஆறவைத்து, கண்ணாடிப்புட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு நாள்தோறும் காலையும், மாலையும் அருந்த, குணம் ஏற்படும்.

எல்லாவற்றிலும், கண் மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நலம்.

Tags:    

Similar News