பொது மருத்துவம்

வயிற்றுப்புண் பிரச்சினைக்கு சிறந்த உணவுமுறை

Published On 2023-11-15 11:48 IST   |   Update On 2023-11-15 11:48:00 IST
  • டீ, காபி அடிக்கடி அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • மிளகாய் அளவோடு எடுக்க வேண்டும்.

வயிற்றுப் புண்கள் பெரும்பாலும் சுகாதார மற்ற உணவில் உள்ள 'ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்ற பாக்டீரியா மூலம் வருகிறது. மனக்கவலை, மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் குடல் புண்களை உருவாக்க முக்கிய காரணமாக உள்ளது.

தவறான உணவுப்பழக்க வழக்கங்கள், நேரம் கடந்து உணவு உண்பது, காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக உண்பது, டீ, காபி அடிக்கடி குடிப்பது, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், தூக்கமின்மை, இரவு அதிக நேரம் கண் விழித்தல், உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுப் புண்கள் வருகிறது.

வயிற்றுப் புண் நோய் வராமல் தடுக்க உணவுப்பழக்கம்:

* காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரங்களில் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.

* டீ, காபி அடிக்கடி அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.

* மிளகாய் அளவோடு எடுக்க வேண்டும்.

* உணவில் கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும்.

* பழைய சாதத்தில் மோர் சேர்த்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிடலாம்.

* காய்கறிகளில் முட்டைக் கோசில் உள்ள குளூட்டமைன் வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது.

* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூசாக்கி குடித்து வர நோய் விரைவில் குணமாகும்.

* சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீர் விட்டு எழு முறை நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு இஞ்சி, புதினா சேர்த்து அரைந்து மோரில் கலந்து குடிக்கலாம்.

* மணத்தக்காளி கீரை அல்லது சூப், பிரண்டைக் கீரை அல்லது பிரண்டை சூப் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

* அகத்திக் கீரை, சீரகம், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

* நுங்கு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம்.

* பழங்களில் ஆப்பிள், மாதுளம்பழம், முலாம்பழம் போன்றவை மிகச்சிறந்தது.

* சீரகம், கொத்தமல்லி சேர்த்து ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி பருகி வர குடல் புண் விரைவில் குணமடையும்.

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், சவ்சவ், முள்ளங்கி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்."

* இரவில் ஆறு மணி நேரம் தொடர்ச்சியாகத் தூங்க வேண்டும். இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் பகல் நேரத்தில் கட்டாயம் ஓய்வு எடுத்தல் வேண்டும். மனக்கவலை, சோர்வு இன்றி இருக்க வேண்டும்.

சித்த மருத்துவத்தில் கீழே கூறப்பட்டுள்ள மருந்துகளை சிந்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

1) வில்வாதி லேகியம், சீரசு வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை 5 கிராம். இரவு 5 கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

2) பிரண்டை வடகம் காலை-இரவு தலா 1 முதல் 2 சாப்பிட நல்ல பலனை தரும்.

3) குள்மகுடோரி மெழுகு ஒரு கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட்டு வர வேண்டும்.

4) ஏலாதி சூரணம் 1 கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி. வீதம் எடுத்து நெய்யில் கலந்து மூன்று வேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

5) வயிற்றுப்பொருமல் இருந்தால் சோம்பத்திதிர், ஓமத்திறி இவைகளில் ஒன்றை 5-10 மி.லி. தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

Tags:    

Similar News