லைஃப்ஸ்டைல்
வருத்தம் தரும் வறுத்த உணவுகள்

வருத்தம் தரும் வறுத்த உணவுகள்

Published On 2021-11-19 05:00 GMT   |   Update On 2021-11-19 08:50 GMT
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது.
இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை. இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர்.

சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.

வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது. அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.
Tags:    

Similar News