லைஃப்ஸ்டைல்

இரத்தசோகையை போக்கும் ராஜ்மா

Published On 2018-09-16 08:02 GMT   |   Update On 2018-09-16 08:02 GMT
இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைப்பதையே, இப்போது நாமும் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ்.  

சத்து விவரம் (100 கிராம் அளவில்) :

புரதம்    22.9 கிராம்
கொழுப்பு    1.3 கிராம்
தாதுக்கள்     3.2 கிராம்
நார்ச்சத்து    4.8 கிராம்
மாவுப் பொருள்    60.6 கிராம்
சக்தி    346  கி.கலோரிகள்
கால்சியம்    260 மில்லிகிராம்
பாஸ்பரஸ்    410 மி.கி.
இரும்புச்சத்து    5.1 மி.கி.

இதில் சோடியமும் பொட்டாசியமும் அறவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள புரதத்தில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.அதனால் முழுப் புரதம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.

ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். உலர்ந்த சுண்டல் வகைகளைப் போலவே, இதில் உள்ள நார்ச்சத்து பலவிதமாகவும் நமக்கு நன்மை புரியும். மலச்சிக்கலைத் தடுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும். நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News