லைஃப்ஸ்டைல்

காலையில் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும்?

Published On 2018-07-04 08:06 GMT   |   Update On 2018-07-04 08:06 GMT
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு என்னவென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
Tags:    

Similar News