லைஃப்ஸ்டைல்

நக சுத்திக்கு வீட்டு வைத்தியம்

Published On 2018-06-29 07:37 GMT   |   Update On 2018-06-29 07:37 GMT
நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். நக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்.
நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும். இங்கு அதற்கான எளிய தீர்வுகளை காணலாம்.

மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்

ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.



சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.

எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது. மருத்துவ ரீதியாக இது நிரூபணம் ஆகவில்லை என்றாலும், அனுபவத்திற்கு நிரூபணமாகியுள்ளது.

மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும்.

இதே போல் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்.
Tags:    

Similar News