பெண்கள் உலகம்
யோக நித்ராசனம்

இரத்தக்குழாய் அடைப்புகளை சீர்செய்யும் யோக நித்ராசனம்

Published On 2019-07-22 09:14 IST   |   Update On 2019-07-22 09:14:00 IST
ஆசனங்களில் அரசி என்று போற்றப்படும் இந்த யோகாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும்.
செய்முறை :

கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும்.

பின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும். ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும்.

பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.

பலன்கள் :


உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் கெட்ட நீர் வெளியேற்றப்படும். இரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி இரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது. 

Similar News