பெண்கள் உலகம்

வயிற்றில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் உத்தீத பத்மாசனம்

Published On 2019-01-10 09:11 IST   |   Update On 2019-01-10 09:12:00 IST
வயிற்றுச் சதைகளை வலிமையாக மாற்றுகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய் விடும். உடலில் காற்று உபாதைகளை நீக்கி விடும்.
உத்தீத என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீய பத்மாசனம் என்பதன் அர்த்தம் ஆகும்.

செய்முறை

விரிப்பில் முதலில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் உள்ளங்கை இரண்டையும் கால்களில் பக்கத்தில் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

கைகளை பலமாக தரையில் ஊன்றிக் கொண்டு மெதுவாக படத்தில் உள்ளது போன்று உடலை மேலே தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தள்ளாட்டமோ, உதறுதலோ இல்லாத அளவுக்கு உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சில் செய்தால் போதுமானது. இதுவே உத்தீத பத்மாசனம் ஆகும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

இதன் பயன்கள்…..

கை எலும்புகள், மணிக்கட்டு பகுதிகளை வலுப்பெற வைக்க இந்த ஆசனம் பயன் தருகிறது. வயிற்றுச் சதைகளை வலிமையாக மாற்றுகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய் விடும். உடலில் காற்று உபாதைகளை நீக்கி விடும். அஜீரணத்தை போக்கும். செரிமான சக்தியை அதிகமாக்கும்.
Tags:    

Similar News