பெண்கள் உலகம்

மனஅழுத்தம், மனக்குழப்பத்தை போக்கும் சூன்ய முத்திரை

Published On 2018-12-04 08:44 IST   |   Update On 2018-12-04 08:44:00 IST
இந்த முத்திரை மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்சனைகளைப் போக்கும்.
உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்

செய்முறை :

நடுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்கவும்.

விரிப்பில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

பலன்கள் :

மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்சனைகளைப் போக்கும்.
கடுமையான காது இரைச்சல், காதுக்குள் ஏதோ ஒலி கேட்பது, யாரோ பேசுவதுபோல் தோன்றுவது ஆகிய தொந்தரவுகளுக்கு 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

வெர்டிகோ’ (Vertigo) எனப்படும் தலைச்சுற்றல் சில நாட்களிலேயே கட்டுப்படும்.

வயோதிகம் காரணமாக அல்லது இடையில் ஏதேனும் சில காரணங்களால் காது கேளாமை, பிறவியிலேயே காது கேளாமை ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் செய்துவர, மாற்றங்கள் தெரியும். காதில் சீழ், புண் ஆகியவை குணமாகும்.

பயணங்களின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை வராமல் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்து வருவது நல்லது.

தீவிர காய்ச்சல், நாட்பட்ட நோய்கள் ஆகியவை படிப்படியாகக் குறையும்.

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கட்டியாக உதிரம் வெளியேறுதல், நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு, மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்து பலனடையலாம்.

Tags:    

Similar News