லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது இப்படி செய்யாதீர்கள்

குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது இப்படி செய்யாதீர்கள்

Published On 2019-08-16 06:31 GMT   |   Update On 2019-08-16 06:31 GMT
சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம்.
சில நேரங்களில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்யும் தவறால் குழந்தைகளின் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம். அதுபோன்ற தவறுகளில் ஒன்றுதான் குழந்தைகள் வாந்தி எடுக்கும் போது நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள்.

குழந்தை வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளின் தலையை நிமிர்த்தி பிடிக்க கூடாது. அவ்வாறு பிடிப்பதனால் வெளியே வரும் வாந்தி மீண்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே குழந்தைகள் வாந்தி எடுத்து முடிக்கும் வரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

அடுத்து அனைவரும் செய்யும் மிக பெரிய தவறுகளில் ஓன்று வாந்தி எடுக்கும் போது வாயை பொத்துவது. குழந்தை பெட்டில் வாந்தி எடுக்க அல்லது பொது இடத்தில் வாந்தி எடுக்க முயற்சிக்கும்போது அவர்களின் வாயை பொத்தி கழிவறைக்கு இழுத்து செல்வார்கள்.

இவ்வாறு செய்வதாலும் வாந்தி மீட்டும் உள்ளே சென்று சுவாச குழாய் அடைப்பட்டு மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் வரை சென்றுவிடும். எனவே இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்வது மிக முக்கியான ஓன்று.
Tags:    

Similar News