லைஃப்ஸ்டைல்
உங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..?

உங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..?

Published On 2019-07-09 06:34 GMT   |   Update On 2019-07-09 06:34 GMT
உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் குழந்தை பயப்படும்போதோ, பசி வரும்போதோ, அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் செய்வது இதாகத்தான் இருக்கும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்காதீர்கள், அது அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.  

விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.

அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள். உங்கள் குழந்தை அவர்கள் கைச்செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபவர்கள் பின்னர் நாக்கு மற்றும் பற்களின் செயல்பாட்டால் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்னாடியே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அதை தொடர முடிவு எடுத்திருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும். மறந்துவிடாதீர்கள், எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுத்துவிடாதீர்கள், இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
Tags:    

Similar News