லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் கண்களில் மை வைக்கலாமா?

Published On 2019-03-21 07:32 GMT   |   Update On 2019-03-21 07:32 GMT
குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது இந்தியாவில் பாரம்பரியமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கண்மை வைப்பது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை காரணமாக கண் மையைப் பல குழந்தைகளுக்கு தன் பெற்றோர் இடுகின்றனர்.

கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா?

குழந்தைக்கு கண்களில் மை வைக்கலாமா? எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏன் கண் மையைக் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்?

குழந்தையின் கண்கள் இன்னும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கின்றனர்.

தொற்றுகள், சூரிய கதிர்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையாலும் சிலர் மை இடுகின்றனர்.

குழந்தைக்கு கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் மை வைக்கின்றனர்.

ஏன் குழந்தையின் கண்களில் மை வைக்க கூடாது?

கடைகளில் விற்க கூடிய கண் மையில் அதிக அளவு லெட் இருக்கிறது. இதனால் குழந்தையின் கண்களில் மை இட்டால், அதிக அளவு லெட்டின் தாக்கத்தால் மூளை, மற்ற உறுப்புகள், எலும்பு மஞ்சை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தசோகை, குறைந்த ஐ.கியூ போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.

சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.

குழந்தையை குளிக்க வைக்கும்போது சின்ன, குறுகிய துளைகளின் வழியாக மையில் உள்ள கெமிக்கல்கள் சென்று கண், மூக்கு போன்ற இடங்களில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்.

கண் மை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மிகவும் ரசாயனத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.

மேலும், உங்கள் விரல்களில் உள்ள தூசு, அழுக்கு, நகங்கள் மூலமாக குழந்தைக்கு பாதிப்பும் ஏற்படலாம்.

உங்கள் கை விரலில் உள்ள அழுக்கு, தொற்று மூலமாக கிருமிகள் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் உடல்நிலையைப் பாதிப்படைய செய்யும்.
Tags:    

Similar News