ஆசிரியர் தேர்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் உயிர் பலிகள்

Published On 2023-05-03 09:34 GMT   |   Update On 2023-05-03 09:34 GMT
  • தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்த வண்ணம் உள்ளனர்.
  • ஆற்றில் உயிர் பலியாகும் நிலையில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.

ஏரியூர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக ஒகேனக்கல் விளங்கி வருகிறது.

மேலும் தற்போது கோடை மழை பெய்து வருவதால் ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதாலும், தொடர் விடுமுறை என்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்த வண்ணம் உள்ளனர். தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 5 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த நான்கு மாதத்தில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினம் தினம் உயிர் பலியாகும் நிலையில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை முறைப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறது.

வருமானத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.

தொடர்ந்து ஏற்படும் உயிர்பலியை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வது, சுற்றுலாப் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News