null
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
இன்று பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை, வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருச்செங்காட்டங்குடி உத்திராபதீசுவரர் புஷ்பப் பல்லக்கில் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகக்குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-4 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி பிற்பகல் 3.14 மணி வரை பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 2.03 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-உவகை
ரிஷபம்-நட்பு
மிதுனம்-இன்பம்
கடகம்-ஆர்வம்
சிம்மம்-அன்பு
கன்னி-நிறைவு
துலாம்- பெருமை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- நிம்மதி
மகரம்-உழைப்பு
கும்பம்-சிறப்பு
மீனம்-ஆதரவு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional